பிலிப்பைன்ஸில் இருந்து விமானம் மூலமாக புறப்பட்ட இந்திய மாணவர்கள் 200க்கும் மேற்பட்டோர் தாயகம் திரும்ப முடியாமல் மலேசிய விமான நிலையத்தில் சிக்கியுள்ளனர்.
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் உள்ள மருத்துவப் பல்கலைக்கழகத்தில் இந்திய மாணவர்கள் ஆயிரக்கணக்கானோர் படித்து வருகின்றனர். இந்நிலையில் கரோனா அச்சுறுத்தல் காரணமாக மணிலா பல்கலைக்கழகத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பிலிப்பைன்ஸ் அரசு பல கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது.
இதனால் அங்கு பயிலும் இந்திய மாணவர்கள் தாயகம் திரும்பும் முயற்சியில் கடந்த மூன்று தினங்களாக முயற்சி செய்து வருகின்றனர்.
தொடர்ந்து, தமிழக மாணவர்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் இன்று மலேசியா வழியாக இந்தியா திரும்ப முயன்ற நிலையில், இந்தியாவுக்கு வரும் விமானங்கள் தடை செய்யப்பட்டுள்ளதால் அவர்கள் மலேசியா கோலாலம்பூர் விமான நிலையத்தில் சிக்கித் தவித்து வருகின்றனர்.
உடனடியாக தாங்கள் இந்தியா திரும்ப மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அதேபோன்று தமிழக மாணவர்களும் நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
இதுதவிர மேலும் நூற்றுக்கணக்கான இந்திய மாணவர்கள் தாயகம் திரும்ப முடியாமல் மணிலாவில் சிக்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பொறுப்பால் உயரும் பெருமை!
கடைசிப் பந்து சிக்ஸரால் மாறிய ஆட்டத்தின் போக்கு: சூப்பர் ஓவரில் கொல்கத்தா ‘த்ரில்’ வெற்றி!
மேற்கு வங்கம்: திரிணமூல் தொண்டா் வீட்டில் 73 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்! என்ஐஏ விசாரணை!!

தொழில்நுட்பத்தை எதிர்கொள்வோம்!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


