தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கரோனா பாதிப்பு உயர்வு: பஞ்சாப் மாநில எல்லைகளை மூட உத்தரவு!

பஞ்சாப் மாநில எல்லைகளை மார்ச் 31ம் தேதி வரை மூட அம்மாநில முதல்வர் அமரீந்தர் சிங் உத்தரவிட்டுள்ளார். 

News image
Updated On :22 மார்ச் 2020, 7:23 am

DIN

பஞ்சாப் மாநில எல்லைகளை மார்ச் 31ம் தேதி வரை மூட அம்மாநில முதல்வர் அமரீந்தர் சிங் உத்தரவிட்டுள்ளார். 

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக இன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு பின்பற்றப்படுகிறது. இதனால் சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகின்றன. 

தொடர்ந்து, கரோனா பரவலைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர  நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், மார்ச் 31ம் தேதி வரை பஞ்சாப் மாநில எல்லைகளை மூட அம்மாநில முதல்வர் அமரீந்தர் சிங் உத்தரவிட்டுள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தில் கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 14யை எட்டியுள்ள நிலையில், அரசு இந்த நடவடிக்கையும் எடுத்துள்ளது. ஜலந்தர், நவான்ஷஹர், கபுர்தலா மற்றும் ஹோஷியார்பூர் உள்ளிட்ட மாவட்ட எல்லைகள் மூடப்பட்டுள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.