கரோனா பாதிப்பில் இந்தியா இன்னும் சமூகப் பரவல் நிலையை எட்டவில்லை என சுகாதாரத்துறை இணைச் செயலர் லால் அகர்வால் தெரிவித்துள்ளார்.
கரோனா தொற்று இந்தியாவில் தீவிரமாகப் பரவி வருகிறது. தற்போதைய நிலவரப்படி, இந்தியாவில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 733 ஆக அதிகரித்துள்ளது. மேலும், பலி எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லால் அகர்வால் நேற்று செய்தியாளர்களிடம் பேசியதாவது,
'கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனினும், இந்தியா இன்னும் சமூகப்பரவல் நிலையை எட்டவில்லை. ஏற்கெனவே கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் ரத்த மாதிரி பரிசோதனை அடிப்படையில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் சமூகப் பரவல் இல்லை எனினும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். சமூகப் பரவல் நிலையை அடையாமல் இருக்க அரசின் வழிமுறைகளை பொதுமக்கள் தொடர்ந்து பின்பற்ற வேண்டும். சமூக இடைவெளியை சரியாக பின்பற்றி, கைகளை அடிக்கடி கழுவுவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டால் சமூகப் பரவல் நிலை வராமல் தடுக்க முடியும்' என்று தெரிவித்தார்.
மேலும், கரோனா சிகிச்சைக்காக 17 மாநிலங்களில் பிரத்யேக மருத்துவமனை அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளதாகவும் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதல்வர் வேட்பாளர்களின் தொகுதிகளில் வாக்கு சதவீதம் எவ்வளவு?

கோவை கணியூரில் வாக்களித்தவர்களுக்கு மரக்கன்றுகள்: மக்களிடையே பெரும் வரவேற்பு!

அந்தியூரில் விரலில் வைக்கப்பட்ட ‘ஸ்டாம்ப் பேடு’ மை!
அமெரிக்காவிலிருந்து வெளியேறும் இந்தியர்கள்! ஏன்?
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


