தற்சார்பு இந்தியா திட்டத்துக்கு 5 கட்டங்களாக ரூ.20.97 லட்சம் கோடி ஒதுக்கீடு!

தற்சார்பு இந்தியா திட்டத்துக்கு 5 கட்டங்களாக ரூ.20.97 லட்சம் கோடி ஒதுக்கீடு!

தற்சார்பு இந்தியா திட்டத்துக்கு ரூ.20.97 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். 

தற்சார்பு இந்தியா திட்டத்துக்கு ரூ.20.97 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். 

பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் 5 ஆம் கட்ட அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டுள்ளார். இதில் பல்வேறு துறைகள் சார்ந்த 7 முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டுள்ளார். 

தற்சார்பு இந்தியா திட்டத்துக்கு அறிவித்த ரூ. 20 லட்சம் கோடி, 5 கட்டங்களாக ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் இதன் மொத்த மதிப்பு ரூ.20.97 லட்சம் கோடி என்றும் கூறினார். 

ஐந்து கட்டங்களாக தொகை ஒதுக்கீடு விவரம்:

முதல் கட்டம் - ரூ. 5,94,550 கோடி

இரண்டாம் கட்டம் - ரூ. 3,10,000 கோடி

மூன்றாம் கட்டம் - ரூ. 1,50,000 கோடி

நான்காம் & ஐந்தாம் கட்டம் - ரூ. 48,100 கோடி

கரீப் கல்யாண் யோஜனா உள்ளிட்ட முந்தைய திட்டங்கள் - ரூ. 1,92,800 கோடி

ஆர்.பி.ஐ சலுகைகள்- ரூ. 8,01,603 கோடி

மொத்தம் - ரூ. 20,97,053 கோடி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com