நல்ல செய்தி: 37-வது நாளாக புதிய தொற்றுகளை விட குணமடைவோர் அதிகம்

சரியான கரோனா தடுப்பு நடத்தை முறைகள்  வெற்றிகரமாக கையாண்டு வரும் காரணத்தால், புதிய தொற்றுகளை விட குணமாவோர் எண்ணிக்கை 37-வது நாளாக இந்தியாவில் அதிகமாக உள்ளது.
நல்ல செய்தி: 37-வது நாளாக புதிய தொற்றுகளை விட குணமடைவோர் அதிகம்
நல்ல செய்தி: 37-வது நாளாக புதிய தொற்றுகளை விட குணமடைவோர் அதிகம்

புது தில்லி: சரியான கரோனா தடுப்பு நடத்தை முறைகள்  வெற்றிகரமாக கையாண்டு வரும் காரணத்தால், புதிய தொற்றுகளை விட குணமாவோர் எண்ணிக்கை 37-வது நாளாக இந்தியாவில் அதிகமாக உள்ளது.

தொடர்ந்து இரண்டாம் நாளாக, இந்தியாவில் புதிதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள கரோனா தொற்றுகளின் எண்ணிக்கை 50,000-க்கும் குறைவாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 45,903 நபர்களுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 48,405 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். நாட்டின் தற்போதைய தொற்றுகளின் எண்ணிக்கை 5,09,673 ஆகும். மொத்த பாதிப்புகளில் இது 5.95 சதவீதம் மட்டுமே ஆகும்.

இது வரை 79,17,373 நோயாளிகள் குணமடைந்துள்ள நிலையில், குணமடைதல் விகிதம் 92.56 சதவீதமாக உள்ளது. குணமடைந்தோர் மற்றும் தற்போது சிகிச்சையில் உள்ளோருக்கிடையேயான இடைவெளி 74,07,700 ஆகும். மத்திய மற்றும் மாநில / யூனியன் பிரதேச அரசுகளின் தொடர் நடவடிக்கைகளின் காரணமாக புதிய தொற்றுகளின் விகிதம் தொடர்ந்து குறைந்து வருகிறது. இது வரை குணமடைந்துள்ளோரில் 79 சதவீதம் 10 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களை சேர்ந்தவர்கள் ஆவர்.

புதிய பாதிப்புகளில் 79 சதவீதமும், 10 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள். கடந்த 24 மணி நேரத்தில் 490 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டில் கரோனா காரணமான உயிரிழப்புகளும் தொடர்ந்து குறைந்து வருகின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com