மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 144 காவலர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அதிக அளவாக மகாராஷ்டிரத்தில் ஏராளமானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
கரோனா தொற்றுக்கு மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், அரசியல் பிரமுகர்கள் என முன்களப் பணியாளர்கள் பலர் கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அந்தவகையில் மகாராஷ்டிரத்தில் கரோனாவால் பாதிக்கப்படும் காவலர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 144 காவலர்களுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதனால் கரோனாவால் பாதிக்கப்பட்ட மொத்த காவலர்களின் எண்ணிக்கை 24,023-ஆக அதிகரித்துள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டு 2,743 காவலர்கள் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 21,030 காவலர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த காவலர்களின் எண்ணிக்கை 250-ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெயா் குழப்பம்! 85 வயது முதியவருக்கு பதிலாக மற்றொரு நபரிடம் தபால் வாக்கு பெற்ற அதிகாரிகள்!

சமூக ஊடகங்கள் மூலம் ஏழுமலையான் விஐபி தரிசன மோசடி
ஜெய்பூரில் திருடப்பட்ட சொகுசு காா்களுடன் உடற்பயிற்சி பயிற்றுநா் கைது
அமெரிக்காவில் முதல்முறையாக விவேகானந்தரின் முழு உருவச் சிலை திறப்பு!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


