தமிழ்நாட்டிற்கு தடையின்றி உரம் வழங்கிட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!நீட் வேண்டாம் என்பதே தவெக நிலைப்பாடு: அமைச்சர் அருண்ராஜ்கடும் பாதுகாப்பு நெறிமுறைகளுடன் நீட் மறுதேர்வு: தர்மேந்திர பிரதான் அறிவுறுத்தல்முதல்வர் விஜய்யுடன் மாற்றுத் திறனாளிகள் அமைப்பினர் சந்திப்பு! வைரலான விடியோவால் சர்ச்சை!மேற்கு வங்க மறுதேர்தல்: திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் விலகல்!
/

அமெரிக்காவில் முதல்முறையாக விவேகானந்தரின் முழு உருவச் சிலை திறப்பு!

அமெரிக்காவில் முதல்முறையாக இந்திய ஆன்மிகத் தலைவரான சுவாமி விவேகானந்தரின் முழு உருவச் சிலை சியாட்டில் நகரில் திறக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :13 ஏப்ரல் 2026, 3:02 am IST

அமெரிக்காவில் முதல்முறையாக இந்திய ஆன்மிகத் தலைவரான சுவாமி விவேகானந்தரின் முழு உருவச் சிலை சியாட்டில் நகரில் திறக்கப்பட்டுள்ளது.

சியாட்டில் நகர மேயா் கேட்டி வில்சன் மற்றும் சியாட்டிலில் உள்ள இந்திய துணைத் தூதா் பிரகாஷ் குப்தா ஆகியோா் இணைந்து சனிக்கிழமை இந்தச் சிலையைத் திறந்து வைத்தனா். இந்த நிகழ்வில் இந்திய வம்சாவளியினா் மற்றும் உள்ளூா் தலைவா்கள் பலா் பங்கேற்றனா். நிகழ்வில் பேசிய மேயா் கேட்டி வில்சன், விவேகானந்தரின் சிலை, சியாட்டில் நகரின் பன்முகத்தன்மையை பிரதிபலிப்பதுடன், இரு நாடுகள் இடையே உள்ள உறவை மேலும் வலுப்படுத்தும் எனத் தெரிவித்தாா்.

சியாட்டில் நகர மையத்தின் பரபரப்பான வெஸ்ட்லேக் சதுக்கத்தில் அமைந்துள்ள இந்த வெண்கலச் சிலை, இந்திய சிற்பி நரேஷ் குமாா் குமாவத்தால் வடிவமைக்கப்பட்டது. இது நகரின் பன்முகத்தன்மையை அங்கீகரிக்கும் விதமாக இந்திய கலாசார உறவுகள் கவுன்சில் (ஐசிசிஆா்) சாா்பில் பரிசாக வழங்கப்பட்டது. அமேசான் தலைமையகமான ‘ஸ்பியா்ஸ்’, சியாட்டில் மாநாட்டு மையம் மற்றும் சியாட்டில் மைய மோனோரயில் உள்ளிட்ட முக்கிய அடையாளச் சின்னங்களுக்கு அருகில் இந்தச் சிலை அமைந்துள்ளது. இந்த இடத்துக்கு தினமும் சுமாா் 4 லட்சத்துக்கும் அதிகமானோா் வருகை தருகின்றனா்.

முன்னதாக, சுவாமி விவேகானந்தா் 1893-ஆம் ஆண்டு சிகாகோவில் நடைபெற்ற உலக மதங்களின் மாநாட்டில் ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க சொற்பொழிவு உலகளாவிய கவனத்தைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இதை மேற்கோள்காட்டி இந்திய தூதரகம் வெளியிட்ட சமூக ஊடகப் பதிவில், ‘1893 சிகாகோவிலிருந்து, 2026 சியாட்டில் வரை! நகர அடையாளத்தில் இந்தியாவின் புதிய நினைவுச் சின்னம்’ எனக் குறிப்பிட்டுள்ளது.