புது தில்லி: நாட்டில் செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி புதிதாக 55,342 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து, நாட்டில் ஒட்டுமொத்த பாதிப்பு 71,75,881 ஆக உயர்ந்தது.
நாட்டில் கரோனா பாதிப்பு மற்றும் மீண்டவர்களின் புள்ளி விவரங்களை மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.
அதில், நாட்டில் புதிதாக 55,342 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா பாதித்தவர்களில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 706 பேர் பலியாகியுள்ளனர். செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி நாட்டில் ஒட்டுமொத்த கரோனா பாதிப்பு 71,75,881 ஆக உயர்ந்துள்ளது. மகிழ்ச்சி தரும் வகையில், கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. நேற்று நாட்டில் கரோனா பாதிப்பு 70 ஆயிரமாக இருந்த நிலையில், இன்று 60 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.
இன்றைய நிலவரப்படி நாடு முழுவதும் கரோனா பாதிப்பு 8,38,729 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கரோனா பாதித்தவர்களில் இதுவரை 62 லட்சம் பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். நாட்டில் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,09,856 ஆக உயர்ந்துள்ளது.
அதேவேளையில் கரோனா தொற்று நாட்டின் பல்வேறு நகரங்களில் ஒரு பக்கம் உயர்ந்தும், மறுபக்கம் குறைந்தும் காணப்படுகிறது.
உதாரணமாக தில்லி, புணே, தாணே நகரங்களில் கரோனா பாதிப்பு குறைந்திருக்கும் நிலையில், பெங்களூரு, மும்பை, கொல்கத்தா நகரங்களில் தொடர்ந்து கரோனா தொற்று உயர்ந்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign

ஈரான் - அமெரிக்கா அமைதிப் பேச்சுவார்த்தை மறைமுகமாக நடந்ததா?

அடுத்த 6 நாள்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழகம் முழுவதும் 'பூத் சிலிப்' வழங்கும் பணி தொடங்கியது!
வீடியோக்கள்
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை


