கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த உத்தரகண்ட் முதல்வர் திரிவேந்திர ராவத் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.
உத்தரகண்ட் முதல்வர் திரிவேந்திர ராவத்துக்கு கடந்த 18-ஆம் தேதி கரோனா உறுதியானதையடுத்து வீட்டில் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டாா். காய்ச்சல் அதிகமானதைத் தொடர்ந்து அவா் டேராடூன் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.
இதன்பின்னர் கடந்த 28ஆம் தேதி மருத்துவா்களின் ஆலோசனைப்படி அவர் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். தற்போது கரோனாவிலிருந்து மீண்ட திரிவேந்திர ராவத் இன்று வீடு திரும்பினார்.
தொடர்ந்து அவர் வீட்டிலேயே மேலும் சிலநாள்கள் தனிமைப்படுத்திக்கொள்ளவிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல்வா் ராவத்தின் மனைவி மற்றும் மகளும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







