ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

தெலங்கானாவில் கரோனா பலி எண்ணிக்கை 1,551 ஆக உயர்வு 

தெலங்கானாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 238 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

News image

கோப்புப்படம்

Updated On :4 ஜனவரி 2021, 11:03 am IST

தெலங்கானாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 238 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. அந்தவகையில் தெலங்கானாவில், கடந்த 24 மணி நேர அறிக்கையை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது, 

தெலங்கானாவில் இன்றைய நிலவரப்படி 238 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு 2.87 லட்சமாக அதிகரித்துள்ளது. 

மேலும், நோய் தொற்றுக்கு புதிதாக இருவர் பலியாகியுள்ளதால், மொத்தமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,551 ஆக அதிகரித்துள்ளது.

தொற்று பாதித்த 5,106 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து நேற்று 27,077 சோதனைகள் மேற்கொண்டு நிலையில் இதுவரை 70 லட்சம் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. 

இதையடுத்து குணமடைந்தோரின் விகிதம் 97.68 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.