இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம்
/

ஜனவரி 13ம் தேதி முதல் நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி

ஜனவரி 13-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் பணிகள் துவங்கும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

News image

ஜனவரி 13-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் பணிகள் துவங்கும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

Updated On :5 ஜனவரி 2021, 5:00 pm IST

புது தில்லி: ஜனவரி 13-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் பணிகள் துவங்கும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா நோய்க்கு எதிராக பல்வேறு நாடுகளும் தடுப்பூசி கண்டறிந்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளன.

குறிப்பாக இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகத்துடன், இந்தியாவின் புணே நகரில் அமைந்துள்ள சீரம் இன்ஸ்டிட்யூட் இணைந்து உருவாக்கியுள்ள ‘கோவிஷீல்ட்’ மற்றும் ஹைதராபாத்தின் பாரத் பயோடெக் நிறுவனத்தின் ‘கோவாக்சின்’ ஆகிய இரண்டு தடுப்பூசிகளுக்கு நேற்று முன்தினம் தேசிய மருந்துக் கட்டுபாட்டு நிறுவனம் அவசர நிலை பயன்பாட்டிற்கு அனுமதி வழங்கியுள்ளது.

அதைத் தொடர்ந்து செவ்வாயன்று இரு நிறுவனங்களும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் இரண்டு தடுப்பூசிகளும் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்வோம் என்று தெரிவித்துள்ளன.

இந்நிலையில் ஜனவரி 13-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் பணிகள் துவங்கும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய அரசு செவ்வாயன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஜனவரி 13-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி போடப்படும் என்றும், முதல் கட்டமாக ஜூலை மாதத்திற்குள் கரோனா முன்களப் பணியாளர்கள், 60 வயதிற்கும் மேற்பட்டவர்கள் என முதன்மைத் தேர்வுக் குழுவைச் சேர்ந்த 30 கோடி பேருக்கு தடுப்பூசியினை செலுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும்’ தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிலும் நாடு முழுவதும் முன்களப் பணியாளர்களுக்கு இலவசமாக  கரோனா தடுப்பூசி செலுத்த மத்திய அரசு திட்டம் வகுத்துள்ளதாகத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.