இந்தியாவில் மேலும் 20 பேருக்கு புதிய வகை கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
இதைத் தொடர்ந்து, புதிய வகை கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 58 ஆக உயர்ந்துள்ளது.
இவர்கள் அனைவரும் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளால் தனி அறையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுடன் தொடர்பிலிருந்த அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களுடன் பயணம் மேற்கொண்டவர்கள், குடும்பத்தினர் மற்றும் தொடர்பிலிருந்தவர்களைக் கண்டறியும் பணி தொடங்கியுள்ளது.
கரோனா:
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,96,236 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் புதிதாக 16,375 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 29,091 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 24 மணி நேரத்தில் 12,917 குறைந்து 2,31,036 ஆக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஜூன் 14 - நேரலை!

கீமோதெரபி மருந்துகள் எளிதில் கிடைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராமதாஸ்

அதிமுக மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பல்; தவெகவுக்கு இன்னும் பலர் வருவார்கள்! செங்கோட்டையன்

அடுத்த 10 ஆண்டுகளில் விண்வெளிப் பொருளாதாரம் 40-45 பில்லியன் டாலரை எட்டும்: மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



