புது தில்லி: தில்லியில் குடியரசு தின அணிவகுப்பை ரத்து செய்ய வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பிரிட்டனில் உருமாறிய கரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருவதால் அங்கு மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு 50,000 பேர் வரையில் புதிதாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் பிரிட்டனிலிருந்து இந்தியாவுக்கு தற்காலிகமாக விமானப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலும் உருமாறிய கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 58 ஆக அதிகரித்துள்ளது.
முன்னதாக, இந்தியக் குடியரசுத் தினவிழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்ள பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார். பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்றுக்கொண்டதுடன், பிரிட்டனில் நடைபெறவுள்ள ஜி7 உச்சிமாநாட்டில் பங்கேற்கும்படி பிரதமர் மோடிக்கு போரிஸ் ஜான்சன் கடிதம் எழுதினார். இந்த சூழ்நிலையில், தற்போது உருமாறிய கரோனா பரவல் சூழலால் இந்தியாவுக்கு பிரிட்டன் பிரதமர் வருகை ரத்தாகியுள்ளது. எனினும் அடுத்த 6 மாதத்திற்குள் இந்தியாவுக்கு வர அவர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் தில்லியில் குடியரசு தின அணிவகுப்பை ரத்து செய்ய வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘மோடி அரசானது தில்லியில் குடியரசு தின அணிவகுப்பை ரத்து செய்ய வேண்டும். அணிவகுப்பு பங்கேற்பாளர்களுக்கு இது நியாயமானதாக இருக்காது. இதை நாம் முன்பே செய்திருந்தால், 2022-ஆம் ஆண்டு குடியரசு தின விழாவிற்குப் பதிலாக நாம் இப்போதே பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனை இந்தியா வருமாறு அழைத்திருக்கலாம்’ என்று பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெய்ரூட்டில் அருகே இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்

கடைசி ஒருநாள்: கூப்பர் கானலி அதிரடி; பரபரப்பான ஆட்டத்தில் ஆஸி. த்ரில் வெற்றி!

இன்றைய செய்திகள் ஜூன் 14 - நேரலை!

இயந்திரக் கோளாறால் ஓமன் கடல் பகுதியில் நின்ற கப்பல்: இந்திய மாலுமிகள் 14 பேர் மீட்பு!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



