இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம்
/

பெய்ரூட் அருகே இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தியிருப்பது தொடர்பாக...

News image

இஸ்ரேல் தாக்குதலில் புகைமூட்டமாக காட்சியளிக்கும் பெய்ரூட் வான் பகுதி - டிஎன்எஸ்

Updated On :14 ஜூன் 2026, 7:38 pm IST

ஈரான் ஆதரவு ஆயுதக் குழுவான ஹிஸ்புல்லா உள்கட்டமைப்புகளை குறிவைத்து லெபனான் தலைநகர் மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேலிய ராணுவம் ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது. பெய்ரூட் வான் பகுதி முழுவதும் புகைமூட்டமாக காட்சியளித்ததை காண முடிந்தது.

வடக்கு இஸ்ரேலில் ஹிஸ்புல்லாவின் தாக்குதல்களுக்கு பதிலடியாகவே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஒரு வாரத்திற்கு முன்பு இஸ்ரேல் பெய்ரூட் புறநகர்ப் பகுதிகள் மீது தாக்குதல் நடத்தியபோது, ​​அதற்குப் பதிலடியாக ஈரான் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.

இதையடுத்து லெபனான் மீதான தாக்குதலை இஸ்ரேல் கைவிட்டால் மட்டுமே ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவோம் என ஈரான் தெரிவித்திருந்தது.

இதனைத்தொடர்ந்து லெபனான் மீதான தாக்குதலை நிறுத்தும்படி இஸ்ரேலை அமெரிக்க அதிபா் டிரம்ப் வலியுறுத்தியிருந்தாா். இதனால் கடந்த சில நாள்களாக லெபனான் மீது இஸ்ரேல் எந்த தாக்குதலையும் நடத்தாமல் இருந்து வந்தது.

இந்த நிலையில், பெய்ரூட் புறநகா் பகுதிகளில் இஸ்ரேல் ஞாயிற்றுக்கிழமை சரமாரியாக தாக்குதல் நடத்தியது. அங்குள்ள ஹிஸ்புல்லா இயக்கத்தினரின் உள்கட்டமைப்பு வசதிகளை குறிவைத்து இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் ஹிஸ்புல்லா அமைப்பினா் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக பிரதமா் நெதன்யாகு அலுவலகம் தரப்பில், கூறப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலில் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து எந்தத் தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

ஹிஸ்புல்லாவின் முக்கிய ஆதரவாளரான தெஹ்ரான், எந்தவொரு அமெரிக்க-ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தத்திலும் லெபனானில் இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதும் அடங்கியிருக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.

Summary

The Israeli military today announced that it launched strike on Lebanese capital targeting infrastructure of Iran-backed armed group Hezbollah.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.