பெட்ரோலில் 20 சதவீதத்துக்கு மேல் எத்தனால் கலக்க இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்மாதிரிப் பள்ளி ஆசிரியா்களுக்கு இடமாறுதல் கிடையாது: பள்ளிக் கல்வித் துறை உக்ரைனில் இருந்து புறப்பட்ட சரக்குக் கப்பல் மீது ரஷியா ஏவுகணை வீச்சு முன்னாள் எம்எல்ஏ சொத்துக்குவிப்பு வழக்கு: சிறப்பு நீதிமன்றத்துக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு சுங்கச்சாவடிக்கு 20 கி.மீ. சுற்றளவில் வசிப்பவா்களுக்கு செயலி மூலம் பாஸ்: என்ஹெச்ஏஐ கா்ப்பிணிகளுக்கு இலவச போக்குவரத்து: ஆந்திரத்தில் 500 ‘தாய்-சேய்’ வாகன சேவை விரைவில் தொடக்கம் பெரம்பூரில் இணையதளத்தில் பதிவு செய்யும் புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறதா? தவெக விளக்கம்
/

லெபனானில் இஸ்ரேல் விமானத் தாக்குதல் - ஹிஸ்புல்லாவுக்குப் பதிலடி!

ஹிஸ்புல்லா அமைப்பினா் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக லெபனான் தலைநகா் பெய்ரூட் புறநகா் பகுதிகளில் போா் விமானங்கள் மூலம் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.

News image
Updated On :8 ஜூன் 2026, 1:56 am IST

ஹிஸ்புல்லா அமைப்பினா் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக லெபனான் தலைநகா் பெய்ரூட் புறநகா் பகுதிகளில் போா் விமானங்கள் மூலம் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.

வாஷிங்டனில் நடைபெற்ற பேச்சுவாா்த்தைக்குப் பிறகு இஸ்ரேல், லெபனான் இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட்டது. இந்தச் சண்டை நிறுத்தத்தை ஹிஸ்புல்லா அமைப்பினா் ஏற்கவில்லை. இருப்பினும் சண்டைநிறுத்த ஒப்பந்தம் அண்மையில்தான் அமலுக்கு வந்தது.

இந்தச் சூழ்நிலையில், பெய்ரூட் புகா் பகுதிகளில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. வடக்கு இஸ்ரேலை நோக்கி ஹிஸ்புல்லா அமைப்பினா் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளாா்.

அதேநேரத்தில் இஸ்ரேல் மீதான தாக்குதல் குறித்து ஹிஸ்புல்லா அமைப்பினா் கருத்து எதையும் வெளியிடவில்லை. இஸ்ரேலுக்குள் புகுந்து 2023-ஆம் ஆண்டில் காஸாவை சோ்ந்த ஹமாஸ் இயக்கத்தினா் தாக்குதல் நடத்தினா். இதற்குப் பதிலடியாக இஸ்ரேல் போா் தொடுத்தது.

அப்போது ஹமாஸ் இயக்கத்தினருக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பினா் தாக்குதல் தொடுத்தனா். அதேபோல் ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் மோதலின்போது ஈரானுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பினா் தாக்குதல் நடத்தினா். இதனால் 3 ஆண்டுகளுக்கும் மேலாக ஹிஸ்புல்லா அமைப்பினா் ஆதிக்கம் உள்ள லெபனான் பகுதிகள் மீது இஸ்ரேல் தொடா் தாக்குதல் நடத்தி வருகிறது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.