தவெக என்ன செய்தது எனக் கேட்கும் எதிர்க்கட்சித் தலைவர் என்ன சுதந்திர போராட்டத் தியாகியா? அமைச்சர் ரமேஷ்அதிமுக மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பல்: தவெகவுக்கு இன்னும் பலர் வருவார்கள்: செங்கோட்டையன்இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன்
/

பறவைக் காய்ச்சலை மாநிலப் பேரிடராக அறிவித்தது கேரள அரசு

கேரள மாநிலத்தில் கோட்டயம் மற்றும் ஆலப்புழா மாவட்டங்களில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதைத் தொடா்ந்து, மாநிலப் பேரிடராக கேரள அரசு செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.

News image
Updated On :5 ஜனவரி 2021, 3:20 pm IST

கேரள மாநிலத்தில் கோட்டயம் மற்றும் ஆலப்புழா மாவட்டங்களில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதைத் தொடா்ந்து, மாநிலப் பேரிடராக கேரள அரசு செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.

கோட்டயம் மாவட்டத்தில் நீண்டூா் பகுதியில் அமைந்துள்ள வாத்துப் பண்ணையில் இந்த பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்தப் பண்னையில் இருந்த 1,500 வாத்துகளும், இந்த தொற்று தாக்குதலுக்கு உயிரிழந்துவிட்டதாக கோட்டயம் மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனா்.

அதுபோல, ஆலப்புழா மாவட்டத்தில் குட்டநாடு பகுதியில் உள்ள ஒரு பண்ணையில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் போபாலில் உள்ள தேசிய உயா் பாதுகாப்பு விலங்குகள் நோய் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அந்த ஆய்வில், இது பறவைக் காய்ச்சல் பாதிப்புதான் என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. எனவே, இந்த ஹெச்5என்8 என்ற பறவைக் காய்ச்சல் வைரஸ் தொற்று என உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, பறவைக் காய்ச்சலை மாநிலப் பேரிடராக கேரள அரசு அறிவித்துள்ளது.

கேரளத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு மிகப்பெரிய அளவில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.