தவெக என்ன செய்தது எனக் கேட்கும் எதிர்க்கட்சித் தலைவர் என்ன சுதந்திர போராட்டத் தியாகியா? அமைச்சர் ரமேஷ்அதிமுக மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பல்: தவெகவுக்கு இன்னும் பலர் வருவார்கள்: செங்கோட்டையன்இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன்
/

மேற்குவங்க விளையாட்டுத் துறை அமைச்சர் ராஜிநாமா

மேற்கு வங்க மாநிலத்தின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் லஷ்மி ரத்தன் சுக்லா தனது பதவியை செவ்வாய்க்கிழமை ராஜிநாமா செய்தார்.

News image

மேற்குவங்க விளையாட்டுத் துறை அமைச்சர் ராஜிநாமா

Updated On :5 ஜனவரி 2021, 3:16 pm IST

மேற்கு வங்க மாநிலத்தின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் லஷ்மி ரத்தன் சுக்லா தனது பதவியை செவ்வாய்க்கிழமை ராஜிநாமா செய்தார்.

மேற்கு வங்க மாநிலத்தை மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமூல் கட்சி ஆட்சி செய்து வருகிறது. மாநில சட்டபேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அக்கட்சியின் பல்வேறு தலைவர்களும் பாஜகவில் இணைந்து வருகின்றனர்.

இந்நிலையில் மேற்கு வங்க மாநில இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்த லஷ்மி ரத்தன் சுக்லா தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். இதற்கான கடிதத்தை முதல்வர் மம்தா பானர்ஜிக்கு அவர் செவ்வாய்க்கிழமை அனுப்பினார்.

சுக்லாவின் பதவி விலகலுக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை. எனினும் இவர் தொடர்ந்து திரிணமூல் கட்சியில் நீடிப்பார் என அக்கட்சியினர் தெரிவித்து வருகின்றனர்.

கடந்த ஆண்டின் இறுதியில் சுவேந்து ஆதிகாரி உள்ளிட்ட பல சட்டமன்ற உறுப்பினர்கள் திரிணமூல் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.