பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

ஒடிசா இரும்பு தொழிற்சாலையில் விஷ வாயு கசிவு: 4 பேர் பலி

ஒடிசா இரும்புத் தொழிற்சாலையில் விஷ வாயு கசிந்து ஏற்பட்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். 6 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

News image

ஒடிசா இரும்பு தொழிற்சாலையில் விஷ வாயுக் கசிவு: 4 பேர் பலி (கோப்புப்படம்)

Updated On :6 ஜனவரி 2021, 4:44 pm IST

புவனேஸ்வர்: ஒடிசா இரும்புத் தொழிற்சாலையில் விஷ வாயு கசிந்து ஏற்பட்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். 6 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் இயங்கி வரும் ரெளர்கீலா இரும்பு தொழிற்சாலையில் நிலக்கரி ரசாயனப் பிரிவில் இன்று 10 பேர் பணியாற்றி வந்தனர்.

இதனிடையே நிலக்கரி ரசாயனப் பிரிவில் ஏற்பட்ட கசிவில் முதற்கட்டமாக 4 பேருக்கு உடல்நிலை மோசமடைந்தது. அவர்களுக்கு தொழிற்சாலை வளாகத்திலேயே முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

அதன்பிறகு அருகில் இருந்த மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில்  அனுமதிக்கப்பட்டிருந்தபோது 4 பேர் உயிரிழந்தனர். மேலும் உடன் பணியாற்றிய இருவருக்கு தொழிற்சாலை வளாகத்திலேயே சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

கார்பன் மோனாக்ஸைடு வாயுக் கசிவால் நான்கு பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரும்பு தொழிற்சாலை வழக்கம்போன்று இயங்கி வருகிறது. 

விபத்து தொடர்பாக விசாரணை நடத்த தொழிற்சாலை சார்பில் உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.