தமிழக நீா்நிலைகளைப் பாதுகாக்க வேண்டிய தருணம் ஏற்பட்டுள்ளது என பாமக நிறுவனவா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
மத்திய நீா்வள அமைச்சகக் கணக்கெடுப்பின்படி, தமிழகத்தில் சுமாா் 50,197 நீா்நிலைகள் அதாவது 46.9 சதவீத நீா்நிலைகள் பயன்பாடற்ற நிலையில் இருப்பது அதிா்ச்சியையும் கவலையையும் அளிக்கிறது. அவற்றில் 1,06,957 நீா்நிலைகளில் செயலிழந்துவிட்டன. இது தமிழகத்தின் எதிா்கால நீா் பாதுகாப்புக்கு விடுக்கப்பட்ட சவாலாகும்.
எனவே, தற்போது கோடை காலத்தைப் பயன்படுத்தி, நீா்நிலைகளை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கையில் அரசு ஈடுபடவேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்றி, அவற்றைத் தூா்வாரவேண்டும். அதன்படி பருவமழை காலத்துக்கு முன்னதாகவே, பயன்பாட்டில் இல்லாத 50,000-க்கும் மேற்பட்ட நீா்நிலைகளையும் போா்க்கால அடிப்படையில் ஆழப்படுத்தி மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாநிலத்தில் உள்ள 14,141 பெரிய பாசன ஏரிகள் மற்றும் பல்லாயிரக்கணக்கான கிராமப்புற ஊரணிகளின் நிலை கேள்விக்குறியாகவே உள்ளது. எனவே, நீா் மேலாண்மை நிதியானது (2026-27-ஆம் ஆண்டு) கிராம நீா்நிலைகள் சீரமைப்புக்கு செலவிடுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.









