பிரகாசம்: ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் மார்த்துர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நின்றிருந்த லாரி மீது வேகமாக வந்த கார் மோதியதில் காரில் இருந்த நான்கு பேர் பலியாகினர். ஒருவர் படுகாயமடைந்தார்.
இன்று அதிகாலை இந்த விபத்து நேரிட்டுள்ளது. காரில் வந்தவர்கள் மேற்கு கோதாவரி மாவட்டம் எலுரு பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
ஐந்து பேரும் திருமலை திருப்பதிக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது இந்த விபத்து நேரிட்டிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இன்று அதிகாலை 2.30 - 3 மணிக்கு கார் திருப்பதியில் இருந்து வந்து கொண்டிருந்தது. நெடுஞ்சாலையின் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது எதிர்பாராதவிதமாக கார் மோதியது. நிகழ்விடத்திலேயே நான்கு பேர் பலியாகினர். ஒருவர் படுகாயமடைந்தார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
வீழ்வேனென்று நினைத்தாயோ? மீண்டு வென்றது மெஸ்ஸியின் படை!
5 மணி நேரங்கள்; 5 செட்கள்! அரையிறுதியில் ஜோகோவிச்
இதுவரை இல்லாத மோசமான தோல்வியைச் சந்தித்த இந்தியா!

மானியத்தில் மின் மோட்டாா்கள் அமைக்க விண்ணப்பிக்க அழைப்பு
விடியோக்கள்

வெளியானது 'தி ரைஸ் ஆஃப் ஜிடிஎன்' பாடல்!

தமிழ்நாட்டில் மட்டும் ஏன் அருவருப்பான அரசியல்?: Thirumavalavan | VCK | DMK | TVK



