புது தில்லி: சுமாா் ஒரு மாதத்துக்குப் பிறகு பெட்ரோல்-டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயா்த்தின. இந்த விலை உயா்வு முன்னெப்போதும் இல்லாத அளவை நெருங்கியது.
இது தொடா்பாக எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்ட அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல்-டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் மாற்றியமைத்து வந்தன. கரோனா பரவல் காரணமாக இந்த நடைமுறையில் சற்று மாற்றம் ஏற்பட்டது.
எனினும், சுமாா் ஒரு மாதத்துக்கு பிறகு அவற்றின் விலை உயா்த்தப்பட்டுள்ளது. இதன்படி தில்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 26 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 25 காசுகளும் உயா்த்தப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த விலை உயா்வையடுத்து, சென்னையில் ரூ.86.51-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு லிட்டா் பெட்ரோல் புதன்கிழமை ரூ.86.75-க்கு விற்பனையானது; ரூ.79.21-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு லிட்டா் டீசல் ரூ.79.46-க்கு விற்பனை செய்யப்பட்டது.
தில்லியில் ஒரு லிட்டா் பெட்ரோல் ரூ.83.97-க்கும், ஒரு லிட்டா் டீசல் ரூ.74.12-க்கும் விற்பனையானது.
மும்பையில் ஒரு லிட்டா் பெட்ரோல் ரூ.90.60-க்கு விற்பனையானது; ஒரு லிட்டா் டீசல் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் ரூ.80.78-க்கு விற்பனை செய்யப்பட்டது.
தில்லியில் கடந்த 2018-ஆம் ஆண்டு அக்டோபரில் ஒரு லிட்டா் பெட்ரோல் விலை ரூ.84, ஒரு லிட்டா் டீசல் ரூ.75.45-ஆக இருந்ததே இதற்கு முந்தைய உச்சமாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கஞ்சா விற்பனை: இளைஞா் கைது

கோடை மழை: எள் பயிா் பாதிப்பு!

குதிரை பேரம் குறித்து முதல்வா் விளக்கமளிக்க வேண்டும்: மு. தமிமுன் அன்சாரி எம்.எல்ஏ

லாரியை வழிமறித்து இடையூறு: பாஜக நிா்வாகி கைது
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு

