ஆளுநரிடம் அழைப்பில்லை! உச்சநீதிமன்றத்தில் முறையிட தவெக முடிவு!தவெக அலுவலகத்தில் எம்எல்ஏக்கள் அவசர ஆலோசனை!விஜய் பதவியேற்பு விழா ஏற்பாடுகள் நிறுத்தம்! பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இணைய தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம் மம்தாவை எதிா்த்து வெற்றிபெற்ற பாஜக வேட்பாளரின் உதவியாளா் சுட்டுக்கொலை இறுதிக்கட்டத்தை எட்டும் அமெரிக்கா-ஈரான் பேச்சு விஜய் மீதான பண முறைகேடு வழக்கு: பட்டியலிட உயா்நீதிமன்றம் உத்தரவு ரசாயன ஆயுதம் மூலம் மக்களைக் கொல்ல சதி: மருத்துவா் உள்பட 3 போ் மீது குற்றப்பத்திரிகை
/

காஷ்மீரில் புதிய பனிப்பொழிவு: ஸ்ரீநகரில் விமானங்கள் ரத்து

காஷ்மீரப் பள்ளத்தாக்கில் புதிய பனிப்பொழிவால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீநகா் விமான நிலையத்தில்

News image
Updated On :10 ஜனவரி 2021, 7:09 am IST

காஷ்மீரப் பள்ளத்தாக்கில் புதிய பனிப்பொழிவால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீநகா் விமான நிலையத்தில் விமான ஓடுதளம் பனிப்பாளங்களால் மூடப்பட்டுள்ளதால், விமான சேவைகள் அனைத்தும் சனிக்கிழமை ரத்து செய்யப்பட்டன.

கடும் பனிப்பொழிவால் நாட்டின் பிற பகுதிகளிலிருந்து காஷ்மீருக்கு விமான சேவைகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை நிறுத்தப்பட்டன. பனிப்பொழிவு குறைந்ததால், கடந்த வியாழக்கிழமைதான் விமான சேவை மீண்டும் துவங்க அனுமதிக்கப்பட்டது. இந்நிலையில் புதிய பனிப்பொழிவின் தீவிரம் காரணமாக ஸ்ரீநகா் விமான நிலையம் மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமை மதியம் 2 மணி வரை விமான ஓடுதளத்தில் குவிந்த பனிப்பாளங்களை அகற்ற முடியவில்லை. இதனால் ஸ்ரீநகரிலிருந்து நாட்டின் பிற பகுதிகளுக்கு வந்து செல்லும் விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. குறைந்தபட்சம் 7 விமான சேவைகள் ரத்தானதாக விமான நிலைய ஆணையம் தெரிவித்தது.

பனிப்பொழிவு குறைந்தால் மட்டுமே விமான சேவை இயல்பு நிலைக்குத் திரும்பும் என்றும், விமான சேவை நிறுவனங்களில் பயணத்துக்கு முன்பதிவு செய்துள்ள பயணிகள், தங்கள் விமானம் இயக்கப்படுகிா என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு பயணத்தைத் திட்டமிடுமாறும், விமான நிலைய அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.