சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வலுப்பெற்றது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்மின்சார ரீடிங் எடுக்கும் ஊழியர்கள் செல்போன் வாங்க ரூ.10,000 வழங்க நடவடிக்கை!பழமுதிர்சோலையில் விமரிசையாக நடைபெற்ற குடமுழுக்கு!ஆலையில் இருந்து அமோனியா வாயுவை அகற்ற 2-வது நாளாக நடவடிக்கைதுணை முதல்வராக திருமாவளவன்!! காலம் சொல்லும்: அமைச்சர் வன்னி அரசு
/

கேரளத்தில் மேலும் 5,528 பேருக்கு கரோனா

கேரளத்தில் புதிதாக 5,528 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (சனிக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :9 ஜனவரி 2021, 7:38 pm IST


கேரளத்தில் புதிதாக 5,528 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (சனிக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 8,06,603 ஆக உயர்ந்துள்ளது. 

5,424 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 7,38,808 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 22 பேர் கரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 3,279 ஆக உயர்ந்துள்ளது.

இன்னும் 64,318 பேர் நோய்த் தொற்றுக்கான சிகிச்சையில் உள்ளனர். 2,02,171 பேர் பல்வேறு மாவட்டங்களில் கண்காணிப்பில் உள்ளனர். 

கடந்த 24 மணி நேரத்தில் 61,239 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படுவோர் விகிதம் 9.03 சதவிகிதமாக உள்ளது. பிரிட்டனிலிருந்து திரும்பியவர்கள் யாருக்கும் தொற்று பாதிப்பு இருப்பது கடந்த 24 மணி நேரத்தில் உறுதி செய்யப்படவில்லை. இதுவரை பிரிட்டனிலிருந்து திரும்பியவர்களில் மொத்தம் 50 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 6 பேருக்கு புதிய வகை கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.