சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வலுப்பெற்றது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்மின்சார ரீடிங் எடுக்கும் ஊழியர்கள் செல்போன் வாங்க ரூ.10,000 வழங்க நடவடிக்கை!பழமுதிர்சோலையில் விமரிசையாக நடைபெற்ற குடமுழுக்கு!ஆலையில் இருந்து அமோனியா வாயுவை அகற்ற 2-வது நாளாக நடவடிக்கைதுணை முதல்வராக திருமாவளவன்!! காலம் சொல்லும்: அமைச்சர் வன்னி அரசு
/

மேற்கு வங்கத்தில் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக வெல்லும்: நட்டா

​மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா தெரிவித்துள்ளார்.

News image

கோப்புப்படம்

Updated On :9 ஜனவரி 2021, 9:07 pm IST


மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் பர்தமன் மாவட்டத்தில் நட்டா சனிக்கிழமை தெரிவித்தது. 

"கடந்த முறை நான் வந்தபோது நிர்வாகம் மற்றும் அரசியல் கட்சியின் திட்டத்தின்படி தாக்குதலுக்குள்ளானோம். இதை நாடே பார்த்தது. மத்திய உள்துறை அமைச்சகம் இதை கவனத்தில் எடுத்துக் கொண்டது. இன்று நான் மீண்டும் வந்துள்ளேன். இதுவரை பயணம் நன்றாக இருக்கிறது.

ஆளும் கட்சி குற்ற உள்ளுணர்வுடன் செயல்பட்டு வருகிறது. ஊழல் நிறுவனமயமாக்கப்பட்டுள்ளது. என்னைப் போன்ற பாதுகாவலர் மீதான தாக்குதல்தான் சாதாரண குடிமக்களுக்கான சட்டம் ஒழுங்கின் உண்மை நிலை" என்றார்.

கரோனா தடுப்பூசி செலுத்தப்படுவது குறித்த பிரதமர் மோடியின் அனைத்து மாநில முதல்வர்கள் கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பங்கேற்பாரா என்று கேள்வி எழுப்பட்டது. இதற்குப் பதிலளித்த அவர், 'மம்தா என்ன செய்யப்போகிறார் என்று அவர் சார்பாக நான் எப்படி பதில் கூற முடியும். நல்ல எண்ணம் இருக்கும் என்று நினைக்கிறேன். மேற்கு வங்க மக்களின் நலனைக் காட்டிலும் தனது ஈகோவிற்கு மம்தா முக்கியத்துவம் அளிக்கக் கூடாது." என்றார்.   
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.