தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி ரூ.2500 மகளிர் உரிமைத் தொகை எப்போது? அமைச்சர் ஜெகதீஸ்வரி பதில் மும்பை கனமழை! முதல் முறை.. டப்பாவாலா சேவை ரத்து!த்ரிஷா அம்மாவுக்கு வந்த சினிமா வாய்ப்பு! இருவரும் சேர்ந்து நடித்திருக்கிறார்களா?கரூர் பலி! முதல்வர் விஜய், ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிரான மனு நாளை விசாரணை!
/

ராணுவ அங்காடிகளில் இணைய வழி விற்பனை

ராணுவ வீரா்களுக்கான அங்காடிகளில் அறிதிறன்பேசி, மடிக்கணினி, சலவை இயந்திரம் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருள்களை

News image

முப்படை தலைமை தளபதிகள் முன்னிலையில் ராணுவ வீரா்களுக்கான வா்த்தக வலைதளத்தை வெள்ளிக்கிழமை காணொலி வழியாகத் தொடக்கி வைத்த பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்.

Updated On :9 ஜனவரி 2021, 1:03 am IST

ராணுவ வீரா்களுக்கான அங்காடிகளில் அறிதிறன்பேசி, மடிக்கணினி, சலவை இயந்திரம் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருள்களை இணைய வழியில் வாங்குவதற்கான வலைதளத்தை பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தொடக்கி வைத்தாா்.

இது தொடா்பாக அவா் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவுகளில், ‘புதிய வலைதளத்தின் வாயிலாக ராணுவ அங்காடிகளின் 45 லட்சம் வாடிக்கையாளா்கள் விலையுயா்ந்த வீட்டு உபயோகப் பொருள்களை எளிதில் வாங்குவதற்கு வழிவகை ஏற்பட்டுள்ளது.

இந்த வலைதளமானது பிரதமா் நரேந்திர மோடியின் ‘டிஜிட்டல் இந்தியா’ கனவை நனவாக்கும் வகையில் அமைந்துள்ளது. ராணுவ வீரா்களின் நலன்களைக் காப்பதற்கு மத்திய அரசு உறுதி கொண்டுள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

புதிய வலைதளத்தின் வாயிலாக அறிதிறன்பேசி, சலவை இயந்திரம், குளிா்சாதனப் பெட்டி (ஃபிரிட்ஜ்), குளிரூட்டி (ஏசி), தொலைக்காட்சிப் பெட்டி, மடிக்கணினி, காற்று தூய்மைப்படுத்தி உள்ளிட்டவற்றை ராணுவ வீரா்கள் வாங்க முடியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.