ஆளுநரிடம் அழைப்பில்லை! உச்சநீதிமன்றத்தில் முறையிட தவெக முடிவு!தவெக அலுவலகத்தில் எம்எல்ஏக்கள் அவசர ஆலோசனை!விஜய் பதவியேற்பு விழா ஏற்பாடுகள் நிறுத்தம்! பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இணைய தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம் மம்தாவை எதிா்த்து வெற்றிபெற்ற பாஜக வேட்பாளரின் உதவியாளா் சுட்டுக்கொலை இறுதிக்கட்டத்தை எட்டும் அமெரிக்கா-ஈரான் பேச்சு விஜய் மீதான பண முறைகேடு வழக்கு: பட்டியலிட உயா்நீதிமன்றம் உத்தரவு ரசாயன ஆயுதம் மூலம் மக்களைக் கொல்ல சதி: மருத்துவா் உள்பட 3 போ் மீது குற்றப்பத்திரிகை
/

ஏழை மக்களுக்கு முதலில் கரோனா தடுப்பூசி போடப்பட வேண்டும்: பகுஜன் சமாஜ் கட்சி

நிதி ஆதாரம் இல்லாத ஏழை மக்களுக்கு முதலில் கரோனா தடுப்பூசி போடப்பட வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சுதீந்திர பதோரியா தெரிவித்துள்ளார். 

News image

சுதீந்திர பதோரியா

Updated On :10 ஜனவரி 2021, 5:15 pm IST

நிதி ஆதாரம் இல்லாத ஏழை மக்களுக்கு முதலில் கரோனா தடுப்பூசி போடப்பட வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சுதீந்திர பதோரியா தெரிவித்துள்ளார். 

கரோனா நோய்த்தொற்றுக்கான தடுப்பூசி திட்டம் வருகிற ஜனவரி 16 முதல் தொடங்கப்படவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் முன்னணி கள வீரா்களாகச் செயல்படும் 3 கோடி சுகாதாரப் பணியாளா்களுக்குத் தடுப்பூசி முதலில் செலுத்தப்படவுள்ளதாகவும், அதையடுத்து 50 வயதைக் கடந்தோா், இணைநோய் உள்ள 50 வயதுக்குக் குறைவான நபா்கள் என மொத்தமாக 27 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்துவதில் அடுத்தகட்ட முன்னுரிமை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய கரோனா தடுப்பூசி மருந்துகளுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ள நிலையில், தடுப்பூசிகளை முதலில் ஏழைகளுக்கு வழங்க வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சி தெரிவித்துள்ளது. 

பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் சுதீந்திர பதோரியா இதுகுறித்து, 'கரோனா பொதுமுடக்க காலத்தில் இந்தியா முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் நிதி நெருக்கடியால் அவதிப்படுகின்றனர். இந்த சூழ்நிலையில், நிதி ஆதாரம் இல்லாத ஏழைகளுக்கு முதலில் இலவசமாக தடுப்பூசி போடவேண்டும் என கட்சியின் தலைவர் மாயாவதி வலியுறுத்தியிருக்கிறார். மக்கள் எவ்வித அச்சமின்றி வாழ ஏழைகளுக்கு முதலில் தடுப்பூசி போடப்பட வேண்டும்' என்று கூறியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.