பஞ்சாப் மாநிலத்தில் திருமண ஊர்வலத்தின்போது மணமகனுடன் திருமண வீட்டாரும் வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருமண ஊர்வலத்தின்போது போராட்டக் களத்தில் சிறிது நேரம் பங்கேற்று, பின்னர் திருமண வீட்டார் திருமண நிகழ்வைத் தொடர்ந்தனர்.
மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லி எல்லைகளில் பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்திற்கு பல்வேறு தரப்புகளிலிருந்தும் ஆதரவு பெறுகி வருகிறது.
இந்நிலையில் பஞ்சாப் மாநிலம் பர்னாலா மாவட்டத்தில் திருமண ஊர்வலத்தின்போது மணமகனுடன் திருமண வீட்டாரும் விவசாயிகளுடான போராட்டத்தில் ஈடுபட்டனர். பஞ்சாபில் வேளாண் சட்டத்திற்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்தில் அரை மணிநேரம் பங்கேற்று பின்னர் திருமண நிகழ்வைத் தொடர்ந்தனர்.
இது தொடர்பாக பேசிய மணமகன் ஜெகதீப் சிங், ''நான் விவசாய குடும்பத்திலிருந்து வந்ததால், வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்தின் முக்கியத்துவத்தை உணர முடிகிறது'' என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







