பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 102-ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
ஜனவரி 11-ஆம் தேதி வரை புதிய வகை கரோனா பாதிப்பு 96 ஆக இருந்தது. நேற்று மேலும் சிலருக்கு புதியவகை கரோனா கண்டறியப்பட்ட நிலையில், இன்று (ஜன. 13) நாட்டில் புதிய வகை கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 102 ஆக அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, கடந்த 24 மணி நேரத்தில் மேலும் சிலருக்கு புதிய வகை கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 102-ஆக அதிகரித்துள்ளது.
புதிய வகை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அந்தந்த மாநில அரசுகளால் தனித்தனி அறைகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
பிரிட்டனுக்கான விமான போக்குவரத்து கடந்த வாரம் முதல் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. பிரிட்டனிலிருந்து வரும் பயணிகள் கரோனா பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விருதுநகர் அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்த அமைச்சருக்கு திடீா் மயக்கம்

சதுரகிரி கோயிலில் தினசரி மலையேற இடைக்காலத் தடை: அறநிலையத் துறை மனு தாக்கல் செய்து வழிபாட்டு உரிமையைக் காக்கக் கோரிக்கை

போக்சோ தடுப்புச் சட்டத்தின் கீழ் தவெக நிா்வாகி மீது வழக்கு






