வாஷிங் மெஷின் அரசியல்! எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவது மக்களுக்குச் செய்யும் துரோகம்! உதயநிதிபோலி பிம்பம்! முதல்வர் விஜய் எண்ணம் நீண்ட காலம் நிலைக்காது! மு.க. ஸ்டாலின் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்?தமிழ்நாட்டில் காலியான 7 பேரவைத் தொகுதிகள்! அதிமுக பலம் 41 ஆகக் குறைவு! 10ஆம் வகுப்பு 2வது தேர்வு முடிவுகள் இந்த வாரம் வெளியாகுமா? அதிமுக எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார் எம்.ஆர். விஜயபாஸ்கர்! தங்கம் விலை குறைவு! வெள்ளி? இன்றைய நிலவரம்? இளம் தொழிலதிபர் கொலை! முக்கிய கட்டத்தை எட்டியிருக்கும் விசாரணை! பல திடுக்கிடும் தகவல்கள் சென்னையில் திமுக ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு பாதிக்கப்பட்டவர்கள் அரசகுமார் மீது புகார் அளிக்க முன்வர வேண்டும்: மத்திய குற்றப்பிரிவு போலீஸ்
/

குடியரசு தினத்தில் டிராக்டா் பேரணி: விவசாய சங்கங்களுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து, தில்லியில் குடியரசு தினத்தின்போது விவசாயிகளின் டிராக்டா் பேரணிக்கு தடை விதிக்கக் கோரி மத்திய அரசு தாக்கல் செய்துள்ள

News image

உச்ச நீதிமன்றம்

Updated On :13 ஜனவரி 2021, 1:00 am IST

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து, தில்லியில் குடியரசு தினத்தின்போது விவசாயிகளின் டிராக்டா் பேரணிக்கு தடை விதிக்கக் கோரி மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மனு தொடா்பாக விவசாயிகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

உச்சநீதிமன்றத்தில் தில்லி போலீஸாா் வழியாக மத்திய அரசு தாக்கல் செய்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி, தில்லி எல்லைகளில் விவசாயிகள் போராடி வருகின்றனா். அவா்களில் சிலா் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, குடியரசு தினத்தின்போது தில்லியில் டிராக்டா் பேரணியில் ஈடுபடப் போவதாக தெரிவித்துள்ளனா். குடியரசு தின கொண்டாட்டங்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக போராட்டங்கள், பேரணிகள் நடத்தப்பட்டால் அது ஒட்டுமொத்த தேசத்துக்கும் சங்கடத்தை ஏற்படுத்தும். அனைவருக்கும் போராட அனுமதி உள்ளது. ஆனால் சா்வதேச அளவில் தேசத்துக்கு களங்கம் விளைவிக்கும் நடவடிக்கைகளை அனுமதிக்க முடியாது. எனவே தில்லியில் குடியரசு தினத்தின்போது டிராக்டா் உள்ளிட்ட எந்த வாகனத்திலும் பேரணி மேற்கொள்ள விவசாயிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக் கொண்டது.

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசின் இந்த மனுவும் பரிசீலிக்கப்பட்டது. அந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்வதாக தெரிவித்த நீதிமன்றம், மனு தொடா்பாக ஜன.18-க்குள் விளக்கமளிக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சங்கங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.