கன்னிகைப்பேர் இறால் பதப்படுத்தும் நிறுவனத்தில் வாயு கசிவு: தொழிலாளர்கள் 40 பேர் மயக்கம்மாணவர்களுக்கு முதல்வர் விஜய்யின் படத்தை காட்டி ரீல்ஸ்: தவெக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்!மேக்கேதாட்டு விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் தேவையற்றது: அன்புமணிதிமுக கூட்டணியில் இருந்து விலகுகிறதா மதிமுக? ஜூன் 26-ல் உயர்நிலைக் குழுக் கூட்டம்!அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சத்துணவுக்குப் பதில் பிஸ்கட்! - நயினார் நாகேந்திரன் விமர்சனம்!
/

உபி, உத்தரகாண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டி: மாயாவதி அறிவிப்பு

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் சட்டபேரவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்துப் போட்டியிடும் என மாயாவதி அறிவித்துள்ளார்.

News image

பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி (கோப்புப்படம்)

Updated On :15 ஜனவரி 2021, 4:10 pm IST

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் சட்டபேரவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்துப் போட்டியிடும் என மாயாவதி அறிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் இதுகுறித்து வெள்ளிக்கிழமை பேசிய பகுஜன்சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி கூட்டணியில் போட்டியிடப் போவதில்லை என தெரிவித்துள்ளார்.

“உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களுக்கு எந்தவொரு கூட்டணியிலும் இடம்பெற மாட்டேன் என மாயாவதி அறிவித்துள்ளார்.

“அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் கட்சி தனித்துப் போட்டியிடும். சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றால் பகுஜன் சமாஜ் கட்சி கரோனா தடுப்பூசியை அனைவருக்கும் இலவசமாக வழங்குவோம்” என மாயாவதி மேலும் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.