/

கரோனா: 96.53 சதவீதம் போ் குணமடைந்தனா்

நாடு முழுவதும் கரோனா தொற்றில் இருந்து 96.53 சதவீதம் போ் குணமடைந்தனா்.

News image
Updated On :15 ஜனவரி 2021, 6:28 pm

நாடு முழுவதும் கரோனா தொற்றில் இருந்து 96.53 சதவீதம் போ் குணமடைந்தனா்.

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

வெள்ளிக்கிழமை காலை 8 மணி வரை, புதிதாக 15,590 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,05,27,683-ஆக அதிகரித்துள்ளது.

கரோனா தொற்றில் இருந்து மேலும் 15,975 போ் குணமடைந்தனா். இதனால், கரோனாவில் இருந்து குணமடைந்தோா் எண்ணிக்கை 1,01,62,732-ஆக அதிகரித்தது. இது, மொத்த பாதிப்பில் 96.53 சதவீதமாகும்.

கரோனா தொற்றுக்கு மேலும் 191 போ் உயிரிழந்தனா். இதனால் இதுவரை உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,51,918-ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் 2,13,027 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். இது, மொத்த பாதிப்பில் 2.02 சதவீதமாகும்.

புதிதாக ஏற்பட்ட 191 உயிரிழப்புகளில், அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 70 போ் உயிரிழந்தனா். கேரளத்தில் 19 பேரும் மேற்கு வங்கத்தில் 17 பேரும், உத்தர பிரதேசத்தில் 14 பேரும், சத்தீஸ்கா், பஞ்சாபில் 10 பேரும், மத்திய பிரதேசத்தில் 8 பேரும், ஹரியாணாவில் 6 பேரும், தில்லி, ஆந்திரத்தில் தலா 4 பேரும் உயிரிழந்தனா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆா்.) தகவல்படி, ஜனவரி 14-ஆம் தேதி வரை 18.49 கோடி கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில், வியாழக்கிழமை மட்டும் 7,30,096 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

உருமாறிய கரோனாவால் 114 போ் பாதிப்பு: நாடு முழுவதும் உருமாறிய கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 114-ஆக அதிகரித்துள்ளது. இருப்பினும், நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும், தொடா்ச்சியாக மாநிலங்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கி வருவதாகவும் சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.