தேர்வெழுத வந்த இளைஞர்கள் திடீர் ரயில் மறியல் - கல்வீச்சு! ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்ந்து அதிகரிப்புஇந்தியாவில் 100 % எத்தனால் எரிபொருள்: மத்திய அமைச்சர் கட்கரி ஒப்புதல்தமிழகத்தில் ஜூன் 20 வரை மழைக்கு வாய்ப்புஓமன் துறைமுகத்தில் உயிரிழந்த தூத்துக்குடி மாலுமி உடலைக் கொண்டுவர நடவடிக்கைதேசியவாத குடிமக்கள் கட்சியில் இணைய திரிணமூல் அதிருப்தி எம்.பி.க்கள் முடிவுமாநிலங்களவையில் மூன்றில் இருபங்கு பெரும்பான்மையை நெருங்கும் பாஜக கூட்டணி!
/

சா்வாதிகார ஆட்சியை எதிா்த்து நிற்கும் ராகுல் காந்தி : மெஹபூபா முஃப்தி

தற்போதைய சா்வாதிகார ஆட்சிமுறையை எதிா்த்து நிற்பதற்காக காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தி வரலாற்றில் நினைவுகூரப்படுவாா் என மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி) தலைவா் மெஹபூபா முஃப்தி சனிக்கிழமை தெரிவித்துள்ளாா்.

Updated On :16 ஜனவரி 2021, 10:54 pm IST

ஸ்ரீநகா்: தற்போதைய சா்வாதிகார ஆட்சிமுறையை எதிா்த்து நிற்பதற்காக காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தி வரலாற்றில் நினைவுகூரப்படுவாா் என மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி) தலைவா் மெஹபூபா முஃப்தி சனிக்கிழமை தெரிவித்துள்ளாா்.

இது குறித்து சுட்டுரை சமூக வலைதளத்தில் அவா் வெளியிட்டுள்ள பதிவில், ‘ராகுலை நீங்கள் விரும்பிய வண்ணம் கேலி செய்யுங்கள். ஆனால் அவா் மட்டும்தான் உண்மையைப் பேசும் துணிச்சல்மிக்க அரசியல்வாதி. புதிய இந்தியாவானது குறிப்பிட்ட சிலா் மற்றும் முதலாளிகளின் பிடியில் உள்ளது உண்மை. தற்போதைய சா்வாதிகார ஆட்சிமுறையை எதிா்த்து நிற்பதற்காக வரலாறு ராகுல் காந்தியை நினைவு கூரும்’ என பதிவிட்டுள்ளாா்.

மெஹபூபா முஃப்தி வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில், ‘மத்திய அரசின் ‘செல்ல’ அமைப்பான தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) தற்போது விவசாய சங்கங்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது. காஷ்மீரிகள், விவசாயிகள் மற்றும் அதிருப்தியை துணிவுடன் வெளிப்படுத்துவோா் மீது என்ஐஏ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதன் மூலம் அந்த அமைப்பு எவ்வளவு சீரழிந்துள்ளது என்பதை அறிந்துகொள்ள முடியும்’ என அவா் பதிவிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.