மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

1 மணி நிலவரம்: மேற்கு வங்கம்-37.42%, அசாம்-38.12% வாக்குப்பதிவு

அசாமில் நடைபெற்று வரும் 2-ம் கட்ட வாக்குப்பதிவில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி 38.12 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன

News image
Updated On :1 ஏப்ரல் 2021, 8:09 am

அசாமில் நடைபெற்று வரும் 2-ம் கட்ட வாக்குப்பதிவில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி 38.12 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.

அசாமில் 3 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், கடந்த மாதம் 27-ம் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து இன்று (ஏப்ரல் 1) 39 தொகுதிகளில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

காலை 7 மணி முதல் மக்கள் வாக்களித்து வரும் நிலையில், 12 மணி நிலவரப்படி 31.80 சதவிகித வாக்குப் பதிவாகி இருந்தன. பிற்பகல் 1 மணி நிலவரப்படி 38.12 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.

அசாமில் ஆளும் பாஜகவுக்கும் காங்கிரஸுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. வாக்குப்பதிவு நடைபெற்று வரும் 39 தொகுதிகளில் பாஜக 34 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மற்ற தொகுதிகளில் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடுகின்றன. 

காங்கிரஸ் 28 தொகுதிகளிலும், கூட்டணிக் கட்சிகளான ஐக்கிய ஜனநாயக முன்னணி 7 இடங்களிலும், போடோலாந்து மக்கள் முன்னணி 4 தொகுதிகளிலும் களம் காண்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.