சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

தில்லியில் மனைவி, பிள்ளைகளைக் கொன்றவர் தற்கொலை

தில்லியின் ரோஹிணி பகுதியைச் சேர்ந்த நபர், தனது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளைக் கொலை செய்து விட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

News image
தில்லியில் மனைவி, பிள்ளைகளைக் கொன்றவர் தற்கொலை
Updated On :1 ஏப்ரல் 2021, 6:59 am

PTI


புது தில்லி: தில்லியின் ரோஹிணி பகுதியைச் சேர்ந்த நபர், தனது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளைக் கொலை செய்து விட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ரோஹிணியின் நஹர்பூர் பகுதியில் புதன்கிழமை இரவு இந்த சம்பவம் நேரிட்டுள்ளது.

தீரஜ் யாதவ் (31)  என்பவர் தில்லி போக்குவரத்துக் கழகத்தில் பேருந்து ஓட்டுநராக இருந்தார். இவர் வீட்டில் தனது அறையில் இருந்த மின் விசியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் உடல் கைப்பற்றப்பட்டது.

இவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு, மனைவி ஆர்த்தி (28), இரண்டு மகன்கள் ஹிதென் (6), அதர்வா (3) ஆகியோரை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதாக காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இது குறித்து வழக்குப் பதிவு செய்திருக்கும் காவல்துறையினர், விசாரணை நடத்தி வருகிறார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.