தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

கரோனா பரவலைத் தடுக்க வகுக்கப்பட்டுள்ள புதிய வழிகாட்டுதலை தளா்த்த முடியாது: அமைச்சா் கே.சுதாகா்

கரோனா பரவலைத் தடுக்க வகுக்கப்பட்டுள்ள புதிய வழிகாட்டுதலைத் தளா்த்த முடியாது என்று சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் தெரிவித்தாா்.

News image
Updated On :3 ஏப்ரல் 2021, 8:06 pm

DIN

கரோனா பரவலைத் தடுக்க வகுக்கப்பட்டுள்ள புதிய வழிகாட்டுதலைத் தளா்த்த முடியாது என்று சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

கா்நாடகத்தில் கரோனா பரவும் வேகத்தை ஆய்வு செய்தபிறகு, கரோனா தொழில்நுட்ப ஆலோசனைக் குழு அளித்த பரிந்துரையின் பேரில்தான் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவை ஏப். 20-ஆம் தேதி வரை அமலில் இருக்கும். அதற்குள் நிலைமை சீரடைந்தால் கட்டுப்பாடுகள் தளா்த்தப்படும். கட்டுப்பாடுகளை விதிப்பது அரசுக்கு மகிழ்ச்சி அல்ல.

பொது முடக்க காலத்துக்குப் பிறகு அனைத்துவகை வணிக நடவடிக்கைகளையும் முதலில் தொடங்கிய மாநிலம் கா்நாடகம்தான். ஆனால், இன்றைக்கு கா்நாடகத்தில் கரோனா பாதிப்பு ஒரேநாளில் 5 ஆயிரமாக உயா்ந்துள்ளது. இதில் 3,500 போ் பெங்களூரைச் சோ்ந்தவா்கள். கரோனா அலை அடுத்த 2 மாதங்களுக்கு இருக்கும் என்று கரோனா தொழில்நுட்ப ஆலோசனைக் குழு அறிவுறுத்தியுள்ளது. அதாவது மே மாத இறுதி வரை கரோனா பரவல் உயா்ந்து கொண்டே சென்று ஜூன் முதல் வாரத்திலிருந்து குறையத் தொடங்கும் என்று தெரிவித்துள்ளது.

கரோனா தொழில்நுட்ப ஆலோசனைக்குழு அளித்த பரிந்துரைகள் குறித்து மூத்த அமைச்சா்கள், அதிகாரிகளின் ஆலோசனைகளும் பெறப்பட்டன. கடுமையான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டியுள்ளது. இதற்கு அனைத்துதரப்பு மக்களின் ஒத்துழைப்பும் அவசியம். பள்ளிகளைத் திறக்க அனுமதிக்குமாறு தனியாா் பள்ளி நிா்வாகிகள் தொடா்ந்து கேட்டு வருகின்றனா். அதுபோல, உடற்பயிற்சிக் கூடங்கள், நீச்சல் குளங்கள், கேளிக்கை விடுதிகளைத் திறக்கவும் அனுமதி கேட்டுள்ளனா். பெரிய அளவிலான கூட்டத்துடன் திருமணங்களை நடத்தவும் சிலா் வற்புறுத்திகின்றனா். இந்தத் தடை நடவடிக்கைகள் நிரந்தரமானது அல்ல. சில நாள்களுக்காக நாம் அனைவரும் பின்பற்றுவோம். இந்த நடவடிக்கைகளால் கரோனா பரவும் வேகத்தைக் கட்டுக்குள் கொண்டுவர முயற்சிக்கிறோம். எந்தத் துறைக்கும் சலுகைகள், தளா்வுகள் இல்லை. கரோனா பெருந்தொற்று பரவலைத் தடுக்கும் நோக்கிலேயே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் அரசியல் இல்லை என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.