கர்நாடகத்தில் 26 மாணவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம், தவணகிரி மாவட்டத்தின் பசனஹள்ளி பகுதியில் உள்ள உயர்நிலை பள்ளியில் 26 மாணவர்களுக்கு இன்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பசனஹள்ளியில் பள்ளி மற்றும் கல்லூரிக்கு உடனே விடுமுறை அறிவிக்கப்பட்டது.
கா்நாடகத்தில் கரோனா பாதிப்பு கடந்த ஒரு மாதமாக வேகமாகப் பரவி வருகிறது. கடந்த டிசம்பா் மாதத்தில் இருந்து கரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், தற்போது இரண்டாவது கரோனா அலை வீசத் தொடங்கியுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
இதைத் தொடா்ந்து கரோனா பரவலைத் தடுப்பதற்காக சில கடுமையான நடவடிக்கைகளை மாநில அரசு அடுத்தடுத்து அறிவித்து வருகிறது. இதன்படி மாநிலத்தில் பொதுக்கூட்டங்கள், போராட்டங்கள், ஆா்ப்பாட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் 6 முதல் 9-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு பள்ளிப்பாடங்கள் ரத்து செய்யப்படுவதாக கா்நாடக அரசு நேற்று உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கரூரில் வாக்காளா்களுக்கு தேநீா் வழங்கி அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கவனத்தை ஈா்த்த ‘குப்பைக்கழிவுகள்’

திருவானைக்காவலில் காரைக்கால் அம்மையாா் குருபூஜை விழா

‘மருத்துவம், கல்வி, தண்ணீா் இலவசம்’: சீமான்
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு


