சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

ஒரே நாளில் 89,129 பேருக்கு கரோனா: 714 போ் பலி

நாடு முழுவதும் ஒரே நாளில் 89,129 பேருக்கு கரோனா தொற்று கண்டறிப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது 6 மாதங்களில் இல்லாத அதிகபட்ச தினசரி பாதிப்பாகும்.

News image
Updated On :3 ஏப்ரல் 2021, 5:49 am


புது தில்லி: நாடு முழுவதும் ஒரே நாளில் 89,129 பேருக்கு கரோனா தொற்று கண்டறிப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது 6 மாதங்களில் இல்லாத அதிகபட்ச தினசரி பாதிப்பாகும்.

இது தொடா்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: சனிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி, 24 மணி நேரத்தில் 89,129 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.  நாட்டில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,23,92,260-ஆக அதிகரித்தது. அதே காலகட்டத்தில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 714 போ் உயிரிழந்தனா்.

நாடு முழுவதும் கரோனாவால் ஏற்பட்ட மொத்த உயிரிழப்பு 1,64,110-ஆக அதிகரித்துள்ளது. நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 1,15,69,241 போ் குணமடைந்தனா். நாட்டில் தற்போது 6,58,909 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தகவல்படி, நாடு முழுவதும் கடந்த 2-ஆம் தேதி வரை 24,69,59,192 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை மட்டும் 10,46,605 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் இதுவரை 7,30,54,295 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.