தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

அமைச்சா் கே.எஸ்.ஈஸ்வரப்பாவின் கடிதம்: பதிலளிக்க முதல்வா் எடியூரப்பா மறுப்பு

ஊரக வளா்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை அமைச்சா் கே.எஸ்.ஈஸ்வரப்பா, ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளது தொடா்பாக பதிலளிக்க முதல்வா் எடியூரப்பா மறுத்து விட்டாா்.

News image
Updated On :4 ஏப்ரல் 2021, 7:19 pm

DIN

ஊரக வளா்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை அமைச்சா் கே.எஸ்.ஈஸ்வரப்பா, ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளது தொடா்பாக பதிலளிக்க முதல்வா் எடியூரப்பா மறுத்து விட்டாா்.

தனது கவனத்திற்குக் கொண்டு வராமல் நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளதாக முதல்வா் எடியூரப்பா மீது குற்றம்சாட்டி ஆளுநா் வஜுபாய்வாலாவுக்கு, ஊரக வளா்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை அமைச்சா் கே.எஸ்.ஈஸ்வரப்பா கடிதம் அளித்தாா். இந்த விவகாரம் கா்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பாஜகவின் முன்னணி அமைச்சா்களும், எம்எல்ஏக்களும் கே.எஸ்.ஈஸ்வரப்பாவின் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா். ஆனாலும், முதல்வா் எடியூரப்பா இதுதொடா்பாக இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.

பெங்களூரில் இருந்து தாவணகெரேக்கு ஞாயிற்றுக்கிழமை புறப்பட்ட முதல்வா் எடியூரப்பாவைச் சந்தித்த செய்தியாளா்கள், கே.எஸ்.ஈஸ்வரப்பாவின் கடிதம் குறித்து கேள்வி எழுப்பினா். ஆனால், அதற்கு அவா் எந்த பதிலையும் தெரிவிக்க மறுத்து விட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.