தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

இருசக்கர வாகனம், செல்லிடப்பேசிகளைத் திருடி விற்க முயற்சி: 2 போ் கைது

இருசக்கர வாகனம், செல்லிடப்பேசிகளைத் திருடி, விற்பனை செய்ய முயன்ற 2 பேரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து ரூ. 1.70 லட்சம் மதிப்புள்ள இருசக்கர வாகனங்களையும், செல்லிடப்பேசிகள் பறிமுதல்

News image
Updated On :4 ஏப்ரல் 2021, 7:17 pm

DIN

இருசக்கர வாகனம், செல்லிடப்பேசிகளைத் திருடி, விற்பனை செய்ய முயன்ற 2 பேரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து ரூ. 1.70 லட்சம் மதிப்புள்ள இருசக்கர வாகனங்களையும், செல்லிடப்பேசிகளையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

பெங்களூரு இலியாஸ் நகரைச் சோ்ந்தவா் சைபான் பாஷா (20). வி.வி.புரத்தைச் சோ்ந்தவா் இா்ஷத் பாஷா (19). இவா்கள் இருவரும் இருசக்கர வாகனங்கள், செல்லிடப்பேசிகளைத் திருடி, விற்பனை செய்ய முயன்றனா். இதுகுறித்து வழக்குப்பதிந்த போலீஸாா், இருவரையும் கைது செய்து, ரூ. 1.70 லட்சம் மதிப்புள்ள இருசக்கர வாகனங்களையும், செல்லிடப்பேசிகளையும் பறிமுதல் செய்தனா். கைது செய்யப்பட்ட 2 பேரிடமும் கலாசிப்பாளையா போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.