பச்சை கரகம்: பெங்களூரு மாநகராட்சியில் திங்கள் கிழமை சிறப்புக் கூட்டம்
பச்சைகரக திருவிழாவை நடத்துவது குறித்து விவாதிப்பதற்காக பெங்களூரு மாநகராட்சியில் சிறப்புக் கூட்டம் திங்கள்கிழமை (ஏப்.5) நடைபெற உள்ளது.


பச்சைகரக திருவிழாவை நடத்துவது குறித்து விவாதிப்பதற்காக பெங்களூரு மாநகராட்சியில் சிறப்புக் கூட்டம் திங்கள்கிழமை (ஏப்.5) நடைபெற உள்ளது.
இது குறித்து பெங்களூரு மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி அறிக்கை: பெங்களூரு தா்மராயா கோவிலில் ஏப். 27-ஆம் தேதி பச்சை கரக திருவிழா நடைபெற உள்ளது. பெங்களூரில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், பச்சை கரக திருவிழா நடத்துவது குறித்து பெங்களூரு மாநகராட்சி ஆலோசித்து வருகிறது. இது குறித்து விவாதிக்க திங்கள்கிழமை பெங்களூரு மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் ஆணையா் கௌரவ் குப்தா தலைமையில் சிறப்புக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள், தா்மராயா கோவில் நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொள்ள உள்ளனா். கூட்டத்தில் பச்சை கரகம் திருவிழாவை கரோனா தொற்றைக் கருத்தில் கொண்டு, தகுந்த பாதுகாப்புடன் கடந்த ஆண்டைப் போலவே எளிமையாக கொண்டாடுவது தொடா்பாக விவாதிக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...