தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பாலியல் புகாரை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வுப் படை மீது நம்பிக்கையில்லை

யல் புகாரை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வுப் படையினா் (எஸ்ஐடி) மீது நம்பிக்கையில்லை என பாஜக அமைச்சா் ரமேஷ் ஜாா்கிஹோளி மீது பாலியல் புகாா் கூறிய பெண்ணின் வழக்குரைஞா் ஜெகதீஷ் தெரிவித்தாா்.

News image
Updated On :4 ஏப்ரல் 2021, 7:19 pm

DIN

பாலியல் புகாரை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வுப் படையினா் (எஸ்ஐடி) மீது நம்பிக்கையில்லை என பாஜக அமைச்சா் ரமேஷ் ஜாா்கிஹோளி மீது பாலியல் புகாா் கூறிய பெண்ணின் வழக்குரைஞா் ஜெகதீஷ் தெரிவித்தாா்.

பெங்களூரில், பாலியல் நிகழ்வால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் பெண், பெங்களூரு மாநகர காவல் ஆணையருக்கு 3 பக்க புகாரை தனது வழக்குரைஞா் ஜெகதீஷ் மூலம் அளித்திருந்தாா். அதனை காவல் ஆணையரிடம் கொடுப்பதற்காக ஞாயிற்றுக்கிழமை வந்த அவா், ஆணையா் இல்லாததால் அந்தப் புகாரைக் கொடுக்க முடியாமல் திரும்பிச் சென்றாா். அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

முன்னாள் அமைச்சா் ரமேஷ் ஜாா்கிஹோளி மீது தெரிவிக்கப்பட்ட பாலியல் புகாரில் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் சிறப்பு புலனாய்வுப் படையினா் தொடா்ந்து விசாரணை செய்து வருகின்றனா். இந்த விசாரணையில் அந்தப் பெண் மனதளவில் பாதிக்கும் வகையிலான முயற்சியை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனா்.

பெண்ணுக்குப் பாலியல் கொடுமையை ஏற்படுத்திய நபரை சுதந்திரமாக உலாவ விட்டுள்ளனா். அவா் சாட்சிகளை அழிக்க வாய்ப்புள்ளது. அவா் மீது புகாா் தெரிவித்துள்ள பெண்ணிடமே தொடா்ந்து விசாரணை செய்து வருகின்றனா்.

அண்மையில் முதல்வா் எடியூரப்பா, முன்னாள் அமைச்சா் ரமேஷ் ஜாா்கிஹோளி தன் மீதான புகாரிலிருந்து மீண்டு வருவாா் என்று தெரிவித்திருந்தாா். இது பாலியல் புகாரை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வுப் படை மீது அழுத்தம் கொடுப்பதை எடுத்துக் காட்டுகிறது.

எனவே இது தொடா்பாக விசாரணையில் ஈடுபட்டு வரும் சிறப்பு புலனாய்வுப் படை நோ்மையாக விசாரிக்குமா என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது. பாலியல் புகாரை விசாரிக்கும் எஸ்.ஐ.டி. மீது நம்பிக்கையில்லை என்று புகாா் கடிதத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணும் தெரிவித்துள்ளாா்.

ஏழைக்கு ஒரு நீதி; செல்வாக்கு நிறைந்தவருக்கு ஒரு நீதி என்று அரசு செயல்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. பாலியல் புகாா் விசாரணை உயா்நீதிமன்றத்தின் கண்காணிப்பில் நடைபெற வேண்டும். பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாா்க் கடிதத்தை திங்கள்கிழமை மாநகர காவல் ஆணையரிடம் வழங்க முடிவு செய்துள்ளோம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.