தில்லியில் ஏப்ரல் 30 வரை இரவு நேர ஊரடங்கு அமல்
கரோனா பெருந்தொற்று கடுமையாக அதிகரித்து வரும் நிலையில், புது தில்லியில் இன்று முதல் ஏப்ரல் 30-ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.


புது தில்லி: கரோனா பெருந்தொற்று கடுமையாக அதிகரித்து வரும் நிலையில், புது தில்லியில் இன்று முதல் ஏப்ரல் 30-ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
தில்லியில் இன்று முதல் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர பொது முடக்கம் அமல்படுத்தப்படுவதாக தில்லி அரசு அறிவித்துள்ளது.
தில்லியில் திங்கள்கிழமை புதிதாக 3,548 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், 15 பேர் கரோனாவுக்கு பலியாகினர். இதன் மூலம் தில்லியில் கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 11,096 ஆக உயர்ந்துள்ளது.
தில்லியில் கரோனா பெருந்தொற்று அதிகரித்து வருவதால் ஏப்ரல் 30 வரை இரவு நேர பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல், கடந்த சில வாரங்களாக கரோனா பரிசோதனை செய்யப்படுவோரில், தொற்று உறுதி செய்யப்படுவோரின் எண்ணிக்கை 5.54 சதவீதமாக உயர்ந்திருப்பதும் கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...