தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

'பாஜக கொடுக்கும் பணத்தை வாங்கிக் கொண்டு திரிணமூலுக்கு வாக்களியுங்கள்'

வாக்காளர்களுக்கு பாஜக கொடுக்கும் பணத்தை வாங்கிக் கொள்ளுங்கள். ஆனால், திரிணமூல் கட்சிக்கு வாக்களியுங்கள் என்று பாஜக எம்.பி. அபிஷேக் பானர்ஜி கூறியுள்ளார்.

News image
Updated On :8 ஏப்ரல் 2021, 11:31 am

DIN

வாக்காளர்களுக்கு பாஜக கொடுக்கும் பணத்தை வாங்கிக் கொள்ளுங்கள். ஆனால், திரிணமூல் கட்சிக்கு வாக்களியுங்கள் என்று பாஜக எம்.பி. அபிஷேக் பானர்ஜி கூறியுள்ளார்.

திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி. அபிஷேக் பானர்ஜி பொதுக் கூட்டத்தில் பேசுகையில், வாக்குக்கு பணம் பெறும்போது, வெறும் ரூ.500 வாங்காதீர்கள். ரூ.5000 கொடுக்கச் சொல்லுங்கள். பாஜக வாக்குக்கு பணம் கொடுத்தால் வாங்கிக் கொள்ளுங்கள். தாமரையிடமிருந்து பணம் வாங்கிக் கொண்டு இரட்டைப் பூக்கள் கொண்ட திரிணமூலுக்கு வாக்களியுங்கள் என்றார்.

அவர்கள் உங்களை ஏமாற்றலாம் என்றால், நீங்கள் ஏன் அவர்களை ஏமாற்றக் கூடாது என்று கேள்வி எழுப்பினார். மேலும், வெளிநபர்கள் நம்மை ஆள வேண்டுமா அல்லது மேற்கு வங்கத்தின் மகள் மம்தா பானர்ஜி வேண்டுமா என்பதை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.