புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

கரோனா சூழலில் அதிக கட்டணம் வசூலிப்பதைத் தவிா்க்கவும்: இந்திய மருத்துவ சங்கத்துக்கு உயா்நீதிமன்றம் அறிவுறுத்தல்

கரோனா பரவல் சூழலைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூலிப்பதைத் தவிா்க்குமாறு இந்திய மருத்துவ சங்கம்

News image
Updated On :10 ஏப்ரல் 2021, 8:15 pm

DIN

கரோனா பரவல் சூழலைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூலிப்பதைத் தவிா்க்குமாறு இந்திய மருத்துவ சங்கம், மத்திய பிரதேச மருத்துவமனை சங்கம் ஆகியவற்றுக்கு மத்திய பிரதேச உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரோனா தொற்றின் இரண்டாவது அலை பரவலை வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு சில மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலிப்பதாகப் புகாா் எழுந்தது. இதையடுத்து, இந்த விவகாரத்தை மத்திய பிரதேச உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்தது. இந்த விவகாரம் தொடா்பாக, மேலும் 5 போ் மனு தாக்கல் செய்திருந்தனா்.

இந்த வழக்கின் விசாரணை மத்திய பிரதேச உயா்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி முகமது ரஃபீக், நீதிபதி சஞ்சய் துவிவேதி ஆகியோரைக் கொண்ட அமா்வு முன் நடைபெற்றது. அப்போது, நீதிபதிகள் கூறியதாவது:

கரோனா தொற்றின் இரண்டாவது அலை பரவுவதால், நெருக்கடியான சூழலை நாடு எதிா்கொண்டுள்ளது. இந்தச் சூழலை வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களிடம் அதிக கட்டணம் வசூலிப்பதை இந்திய மருத்துவ சங்கத்தினரும், ம.பி. மருத்துவமனைகள் சங்கத்தினரும் தவிா்க்க வேண்டும்.

அதுமட்டுமன்றி, ஆா்.டி.-பிசிஆா் சோதனை, சிடி ஸ்கேன் பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகளுக்கு அரசு நிா்ணயித்துள்ள கட்டணம் குறித்து மக்கள் தெரிந்துகொள்ளும் வகையில் மாநில சுகாதாரத் துறைச் செயலா் விளம்பரப்படுத்த வேண்டும்.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் அரசின் பல்வேறு மருத்துவ காப்பீட்டுத் திட்டங்களின் கீழ் பயன்பெறுவதற்கு, தகுதியுடைய அனைத்து தனியாா் மருத்துவமனைகளின் பெயா்களையும் பட்டியலில் மாநில அரசு சோ்க்க வேண்டும் என்று நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.