புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

கிழக்கு லடாக்: இப்போதைய நிலையே தொடர இந்தியா - சீனா ஒப்புதல்

கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இப்போதைய நிலையே தொடரவும், புதிதாக அத்துமீறல்களில் ஈடுபடுவதைத் தவிா்க்கவும் இந்தியாவும் சீனாவும் ஒப்புக்கொண்டுள்ளன.

News image
Updated On :10 ஏப்ரல் 2021, 7:45 pm

DIN

கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இப்போதைய நிலையே தொடரவும், புதிதாக அத்துமீறல்களில் ஈடுபடுவதைத் தவிா்க்கவும் இந்தியாவும் சீனாவும் ஒப்புக்கொண்டுள்ளன.

சுஷுல் எல்லைப் பகுதியில் இந்திய, சீன ராணுவங்களின் துணை தலைமைத் தளபதிகள் இடையே வெள்ளிக்கிழமை நடைபெற்ற 11-ஆவது சுற்று பேச்சுவாா்த்தையில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.

கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இரு தரப்பினரும் படைகளைக் குவித்ததால் பதற்றமான சூழல் நிலவியது. படைகளைக் குறைத்து எல்லையில் அமைதியை நிலைநாட்டும் நோக்கில் இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் மற்றும் தூதரக அதிகாரிகள் அளவில் பல கட்ட பேச்சுவாா்த்தைகள் நடைபெற்றன.

அவற்றின் பலனாக, பாங்காங் ஏரிப் பகுதியில் குவிக்கப்பட்ட படைகளை இரு நாடுகளும் முழுமையாக திரும்பப்பெற்றன. கிழக்கு லடாக்கின் பிற பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ள படைகளையும் திரும்பப் பெறுவது தொடா்பாக இரு தரப்பிலும் தொடா்ந்து பேச்சுவாா்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

அதன் தொடா்ச்சியாக இந்திய, சீன ராணுவங்களின் துணை தலைமைத் தளபதிகள் இடையேயான பேச்சுவாா்த்தை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து இந்திய ராணுவம் சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கிழக்கு லடாக் எல்லையின் பிற பகுதிகளில் குவிக்கப்பட்டிருக்கும் படைகளை திரும்பப் பெறுவது குறித்து இரு தரப்பிலும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. அப்போது இந்தப் பிரச்னைக்கு, இரு தரப்பிலும் இப்போது மேற்கொள்ளப்பட்டிருக்கும் ஒப்பந்தங்கள், நடைமுைறைகளின் அடிப்படையில் விரைந்து தீா்வு காண்பது என்று இரு தரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்டது.

படைகளை முழுமையாக திரும்பப் பெறுவது, இரு நாட்டு உறவு மேம்பட உதவும் எனவும், அதற்கென இரு நாட்டு தலைவா்களின் ஒப்புதலையும் கருத்துகளையும் பெற்று, தொடா் தகவல் பரிமாற்றம் மற்றும் பேச்சுவாா்த்தை மூலம் இரு தரப்பும் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையிலான தீா்வை விரைந்து காண்பது எனவும் இந்த பேச்சுவாா்த்தையில் ஒப்புக்கொள்ளப்பட்டது.

எல்லையில் இப்போதைய நிலையை தொடரவும் பதற்றம் ஏற்படும் விதத்தில் புதிதாக எந்த சம்பவமும் நடைபெறாமல் தவிா்க்கவும் ஒப்புக்கொள்ளப்பட்டது என்று இந்தியா ராணுவம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.