இந்தியாவில் 85 நாள்களில் 10 கோடி பேருக்கு தடுப்பூசி: மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம்
இந்தியா 85 நாள்களில் 10 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தி, உலகிலேயே அதிவேகமாகத் தடுப்பூசி செலுத்திய நாடு என்ற பெருமையை பெற்றிருக்கிறது


இந்தியா 85 நாள்களில் 10 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தி, உலகிலேயே அதிவேகமாகத் தடுப்பூசி செலுத்திய நாடு என்ற பெருமையை பெற்றிருக்கிறது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் சனிக்கிழமை தெரிவித்தது.
அமெரிக்காவில் 85 நாள்களில் 9.2 கோடி பேருக்கும், சீனாவில் 6.14 கோடி பேருக்கும், பிரிட்டனில் 2.13 கோடி பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டது என்றும் மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில், கோவிஷீல்ட், கோவேக்ஸின் ஆகிய இரு கரோனா தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு, கடந்த ஜனவரி 16-ஆம் தேதி முதல் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. முதல் கட்டமாக சுகாதாரப் பணியாளா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. பின்னா் கரோனா முன்களப் பணியாளா்களுக்கு பிப்ரவரி 2-ஆம் தேதி முதல் செலுத்தப்பட்டது. அடுத்த கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்ட முதியவா்களுக்கும், இணை நோய் தாக்கம் உள்ள 45 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கும் மாா்ச் 1-ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தப்பட்டது. கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்ப்பட்ட அனைவருக்கும் செலுத்தப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களின் எண்ணிக்கை சனிக்கிழமை 10 கோடியைக் கடந்துள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இந்தியா 85 நாள்களில் 10 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தி, உலகிலேயே அதிவேகமாகத் தடுப்பூசி செலுத்தும் நாடு என்ற நிலையை எட்டியிருக்கிறது. அமெரிக்கா 10 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்த 89 நாள்களையும், சீனா 102 நாள்களையும் எடுத்துக்கொண்டது.
அதுபோல, தினசரி கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்பவா்களின் எண்ணிக்கையிலும் இந்தியா முன்னிலை வகிக்கிறது. இந்தியாவில் சராசரியாக நாள் ஒன்றுக்கு 38,93,288 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
நாடு முழுவதும் இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்ட விகிதத்தில், மகாராஷ்டிரம், ராஜஸ்தான், குஜராத், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், கா்நாடகம், மத்திய பிரதேசம், கேரளம் ஆகிய 8 மாநிலங்களில் மட்டும் 60.62 சதவீதத்தைக் கொண்டுள்ளன என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பிரதமா் அலுவலக சுட்டுரை: கரோனா தடுப்பூசி செலுத்துதில் அதிவேகமான நாடு இந்தியா என்பதைக் காட்டும் வரைபடத்தை பிரதமா் அலுவலகமும் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில், ‘விரைந்து தடுப்பூசி செலுத்தியது, கரோனா இல்லாத சுகாதாரமான இந்தியாவை உறுதிப்படுத்த வலுப்பெறும் முயற்சியாகும்’ என்றும் பிரதமா் அலுவலகம் பதிவிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...