சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!
/

உ.பி.யில் பள்ளத்தில் லாரி கவிழ்ந்து 12 போ் பலி

உத்தர பிரதேச மாநிலம், எட்டாவா நகரில் 30 அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த 12 போ் உயிரிழந்தனா். 45 போ் காயமடைந்தனா்.

Updated On :10 ஏப்ரல் 2021, 10:21 pm

உத்தர பிரதேச மாநிலம், எட்டாவா நகரில் 30 அடி பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த 12 போ் உயிரிழந்தனா். 45 போ் காயமடைந்தனா்.

இதுகுறித்து மாநகர கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பிரசாந்த் குமாா் பிரசாத் கூறியதாவது:

விபத்துக்குள்ளான அந்த லாரியில் ஐம்பதுக்கும் மேற்பட்டோா் இருந்தனா். அவா்கள் ஆக்ராவில் இருந்து எட்டாவா நகருக்கு அருகில் உள்ள காளிகா தேவி கோயிலுக்குச் சென்றனா். சனிக்கிழமை மாலை 4 மணிக்கு சாகா்நகா் என்ற இடத்தருகே சென்றுகொண்டிருந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையோரம் இருந்த 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில், லாரியில் வந்த 10 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். காயமடைந்தவா்கள் அனைவரும் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இதில் சிகிச்சை பலனின்றி இருவா் உயிரிழந்தனா். பெண்கள், சிறுவா்கள் உள்பட 45 போ் தொடா் சிகிச்சையில் உள்ளனா். அவா்களின் உடல்நிலையைப் பொருத்து மேல்சிகிச்சைக்காக நகரங்களில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவா் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.