மங்களூருவில் இரவு ஊரடங்கு உத்தரவை மீறிச் செயல்பட்ட 68 வாகனங்களை மங்களூரு நகர காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
நாடு முழுவதும் கரோனா தொற்று பரவிவரும் நிலையில், பல மாநிலங்களில் இரவு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மங்களூருவிலும் இரவு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உத்தரவு பிறப்பிக்கப்பட்ட முதல் நாளிலேயே வாகன ஓட்டிகள் தங்கள் எல்லையை மீறிச் செயல்பட்டதால், இருசக்கரங்கள் உள்பட 68 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
நகரத்தின் வெவ்வேறு இடங்களில் 45 சோதனைச் சாவடிகளை காவல்துறையினர் அமைத்துள்ளனர். இரவு 10 மணிக்குப் பிறகு வாகனங்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.
மேலும், நகரத்தில் உள்ள பார்கள், உணவகங்கள் இரவில் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றைக் கண்காணித்து வருவதாக நகர காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெங்களூருவில் பெய்த கனமழைக்கு சுவா் இடிந்து விழுந்து 7 போ் பலி: பிரதமர் மோடி இரங்கல்; நிவாரண நிதி அறிவிப்பு

லடாக்கில் மிதமான நிலநடுக்கம்!

விஜய்தான் தமிழ்நாட்டை ஆள்வார்; இலங்கை, நேபாளம் போல கருத்துக்கணிப்புகள் பொய்யாகும்! - செங்கோட்டையன்

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


