சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

பாஜக மாநிலங்களவை எம்.பி.க்கு கரோனா தொற்று

பாஜக மாநிலங்களவை உறுப்பினரான சரோஜ் பாண்டேவிற்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

News image

பாஜக மாநிலங்களவை எம்.பி.க்கு கரோனா தொற்று

Updated On :13 ஏப்ரல் 2021, 6:11 am

பாஜக மாநிலங்களவை உறுப்பினரான சரோஜ் பாண்டேவிற்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரும் கரோனா தொற்று பரவல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. 

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்ட பாஜகவின் மாநிலங்களவை உறுப்பினர் சரோஜ் பாண்டே சிகிச்சைக்காக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

இதுதொடர்பாக தனது சுட்டுரைப் பதிவில் அவர்,“கரோனா அறிகுறிகளுடன் காணப்பட்ட நிலையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. கடந்த சில தினங்களாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.