இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கு இந்தியா அனுமதி

இந்தியாவில், ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி  என்ற கரோனா தடுப்பூசிக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ளது.

News image
ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கு இந்தியா அனுமதி
Updated On :13 ஏப்ரல் 2021, 4:13 am

DIN


புது தில்லி: இந்தியாவில், ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி  என்ற கரோனா தடுப்பூசிக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ளது.

ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை இந்தியாவில் அவசரகாலத் தேவைக்கு பயன்படுத்தும் வகையில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஸ்புட்னிக்-வி தடுப்பூசி மருந்து 91.6% செயல்திறன் கொண்டது. இதனை பொதுமக்களுக்கு வழங்க இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது.

மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், அவசர காலத் தேவைக்கு இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

நாட்டில் இதுவரை கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய இரண்டு கரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ள நிலையில், தொடர்ந்து இந்தியாவில் பயன்பாட்டுக்கு வரும் 3வது தடுப்பூசி இதுவாகும்.

ரஷ்யா உள்ளிட்ட 55 நாடுகளில் ஸ்புட்னிக்-வி ஏற்கனவே பயன்பாட்டில் உள்ளது. மருத்துவ வல்லுநகர்கள் குழுவின் பரிந்துரையைத் தொடர்ந்து இந்திய மருந்து கட்டுப்பாடு அமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.